• Tue. Nov 10th, 2026

24×7 Live News

Apdin News

பிரிட்டன்: ஒரே நேரத்தில் 5 அரசு வேலைகளில் முழு நேரமாக பணியாற்றி மோசடி – எப்படி?

Byadmin

Nov 10, 2026


ஒரே நேரத்தில் ஐந்து அரசு வேலைகள், மோசடி, பணிமோசடி, இங்கிலாந்து, பிரிட்டன், அரசு வேலை, கைது

படக்குறிப்பு, காஷிம் சௌத்ரி வரி செலுத்துவோரின் பணத்தில் 284,000 பவுண்டுக்கும் அதிகமான தொகையை மோசடியாக சம்பாதித்துள்ளார்.

2023 மே மாதம், காஷிம் சௌவுத்ரியுடன் அவரது மேலாளர் அலீஷா ஆடம்ஸ் காணொளி வாயிலாக பேசினார்.

பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முகமையில் பணியாற்றிய காஷிம், அப்போது கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்தார். மீண்டும் பணிக்குத் திரும்புவதற்கு அவருக்கு உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்த ஆடம்ஸ் விரும்பினார்.

காணொளி அழைப்பின் தொடக்கத்தில் சௌத்ரி இருமிக் கொண்டிருந்தார். தனது உடல்நிலை சரியில்லை என்று காட்டும் விதமாக கைக்குட்டைகளையும் கேமரா முன்னால் அசைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரது வெளிறிய தோற்றம் ஆடம்ஸுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சௌத்ரியின் நெற்றியில் பூசப்பட்டிருந்த வெள்ளை நிறப் பொடி வியர்வையில் கரைந்து வழிந்ததை அவர் கவனித்தார்.

“சௌத்ரிக்கு வியர்த்திருந்தது. நெற்றியில் பூசப்பட்டிருந்த வெள்ளைப் பொடி அழிந்திருந்தது. அதனால் நெற்றிக்குக் கீழேயும் கழுத்திலும் கருமையாகத் தெரிந்தது,” என்று நீதிமன்ற விசாரணையின்போது ஆடம்ஸ் தெரிவித்தார்.



By admin