• Tue. Nov 10th, 2026

24×7 Live News

Apdin News

புக்கர் இலக்கியப் பரிசை வென்றார் இங்கிலாந்து எழுத்தாளர் எம். ஜான் ஹாரிசன்

Byadmin

Nov 10, 2026


இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் எம். ஜான் ஹாரிசன் தனது ‘தி எண்ட் ஆஃப் எவ்ரிதிங்’ (The End of Everything) என்ற நூலுக்காக மதிப்புமிக்க புக்கர் இலக்கியப் பரிசை வென்றுள்ளார். இதன்மூலம் 81 வயதான ஹாரிசன், புக்கர் பரிசு வரலாற்றிலேயே அவ்விருதைப் பெற்ற மிகவும் வயதான எழுத்தாளர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

உலகப் பேரழிவுக்குப் பிந்தைய எதிர்காலத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ‘தி எண்ட் ஆஃப் எவ்ரிதிங்’ நாவலானது, இம்முறை புக்கர் விருதுப் போட்டிக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகளிலேயே பக்க அளவில் மிகவும் சிறிய நூலாகும்.

உலகளாவிய ரீதியிலான பேரழிவு ஒன்று நிகழ்ந்ததன் பின்னரான அண்மைக்காலச் சூழலை அடிப்படையாகக் கொண்டு இந்த நாவலின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், முக்கியமாக இரண்டு கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தி இக்கதை நகர்த்தப்பட்டுள்ளது.

The post புக்கர் இலக்கியப் பரிசை வென்றார் இங்கிலாந்து எழுத்தாளர் எம். ஜான் ஹாரிசன் appeared first on Vanakkam London.

By admin