• Sun. May 3rd, 2026

24×7 Live News

Apdin News

புதிய வீடுகளை அமைப்பதற்கான அங்குரார்ப்பண வைபவம் ரொசான் எம்.பி தலைமையில் ஆரம்பம்

Byadmin

May 3, 2026


திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் வரிய குறைந்த வருமானம் பெறும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான வீடமைப்பு திட்ட அங்குரார்ப்பண வைபவம் நேற்று சனிக்கிழமை  (02) இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் க.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன கலந்து சிறப்பித்தார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மூலமாக அமுல்படுத்தப்படும் குறித்த திட்டம் ஊடாக எட்டு வீடுகள் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் வழங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு வீடும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியானது. முதற்கட்டமாக ஒன்றரை இலட்சம் ரூபாவுக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.

பொற்கேணி,தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை கிழக்கு,மீரா நகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் முதற்கட்டமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதில் வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ,தேசிய மக்கள் சக்தியின் பிரஜா சக்தி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

By admin