• Sat. Nov 21st, 2026

24×7 Live News

Apdin News

மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை: 13 ஆண்டுகளாக நடந்த கொடுமை அம்பலமானது எப்படி?

Byadmin

Nov 21, 2026


ஜோன் யங்

படக்குறிப்பு, ஜோன் யங்

    • எழுதியவர், பெத் க்ரூஸ் & ஃபியோனா லாம்டின்
    • பதவி, ‎
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கணவரால் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன், கணவரால் ஆன்லைனில் பாலியல் தொழிலுக்காக விளம்பரப்படுத்தப்பட்ட பெண், தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நான்கு பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பிறகும், “தன்னால் ஒருபோதும் முழுமையாகப் பாதுகாப்பாக உணர முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இதுபோன்ற வழக்கில் நடைபெற்ற முதல் விசாரணை இது. தனது அடையாளத்தை வெளியிடுவதற்கு ஒப்புக்கொண்ட ஜோன் யங், “இந்த உலகத்திலேயே நான் அதிகம் நம்பிய நபர், என்னை மிகக் கொடூரமான முறையில் ஏமாற்றிவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமையன்று, வின்செஸ்டர் கிரௌன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், நார்மன் மேக்சோனி (48), ரிச்சர்ட் வில்கின்ஸ் (62), கானர் சாண்டர்சன்-டாய்ல் (32), முகமது ஹசன் (38) ஆகிய நான்கு பேரும் பல்வேறு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதில், வில்கின்ஸ், மேக்சோனி ஆகிய இருவரும் தலா ஒரு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஃபிலிப் யங்கை விவாகரத்து செய்த ஜோன் யங், இந்தக் கொடுமைகள் “நான் வாழ்ந்து வந்த வாழ்க்கையை என்னிடம் இருந்து பறித்து விட்டது” தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்திற்கு வெளியே பேசிய அவர், “எனக்கு நேர்ந்த கொடுமைக்கு என் கணவர் மட்டுமே காரணமல்ல. இதில் பங்கேற்க மற்றவர்களும் அழைக்கப்பட்டனர். அவர்களும் அதற்குச் சம்மதித்தனர்” என்று கூறினார்.

By admin