• Sat. May 16th, 2026

24×7 Live News

Apdin News

ரவி மோகனின் குற்றச்சாட்டுகள் பொய்: ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் விளக்கம்

Byadmin

May 16, 2026


நடிகர் ரவி மோகனும் அவரது மனைவி ஆர்த்தியும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே பிரபல பாடகியான கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் ஒரு திருமண விழாவில் பங்கேற்றது சர்ச்சையாக பேசப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு விழாக்களில் அவர்கள் ஜோடியாக பங்கேற்றனர். இருவரும் ஒன்றாக வாழ்வது குறித்து ரவி மோகனின் மனைவி ஆர்த்தி கண்டனம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் பாடகி கெனிஷா நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தான் சென்னையை விட்டு செல்வதாகவும் பதிவிட்டு இருந்தார். அவரது பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை ஜெயம் ரவி மனைவி மற்றும் தாயர், ஒரு நடிகை மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த நிலையில் ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

ஆர்த்தி மிரட்டி திருமணம் செய்து கொண்டார் என ரவிமோசன் கூறுவது பொய். கையை அறுத்துக் கொண்டு, மிரட்டி யார் திருமணம் செய்தனர்? என்பது விரைவில் வெளியே வரும். ஒரு பெண்ணிற்கு அநியாயம் நடந்தால், மற்ற பெண்கள் குரல் கொடுக்கத்தான் செய்வார்கள். மருமகனான ரவி மோகன் மீது இன்னும் மரியாதை உள்ளது.

ஒன்றரை வருடமாக நீதிமன்றத்தில் இருக்கும் விஷயத்தை இன்று ரவி மோகன் பேசி உள்ளார். நான் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்யாததால், அழ மாட்டேன், எமோஷனல் ஆக மாட்டேன். ரவியின் பேச்சால் குழந்தைகளுக்கு மன உளைச்சல்.

ரவி மோகனுக்கு என்ன மன உளைச்சல் என்று தெரியவில்லை. குழந்தைகளை பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறுவது பொய். என் மீதான அவதூறுகளுக்கு நான் நிச்சயம் பதில் சொல்வேன்.

திருமணமான பிறகு ஒரே வங்கி கணக்கு வைத்திருப்பது தவறில்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால் இதுவரை நான் இதுபற்றி பேசியதில்லை. எல்லா பெற்றோரும் குழந்தைகளுக்காகவே வாழ்கிறார்கள்.

இவ்வாறு சுஜாதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

By admin