• Fri. Nov 6th, 2026

24×7 Live News

Apdin News

லாஸ் ஏஞ்சலிஸ்: இந்திய குடியேறி நித்யா ராமன் தோல்வியே கண்டிராத மேயரை எப்படி வீழ்த்தினார்?

Byadmin

Nov 6, 2026


நித்யா ராமன்

    • எழுதியவர், கிறிஸ்டா ஹெய்ஸ்
    • பதவி, லாஸ் ஏஞ்சல்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில், ஜனநாயக சோசலிசவாதியான நித்யா ராமன், பதவி வகித்து வந்த கேரன் பாஸை தோற்கடித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க காங்கிரஸில் பணியாற்றியதோடு, அரசியல் பதவிக்காகப் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோல்வி அடைந்ததில்லாத அரசியல் செல்வாக்கு மிக்க தலைவரான பாஸுக்கு எதிராக, வெற்றி வாய்ப்பு குறைந்த வேட்பாளராகக் களமிறங்கிய நித்யா ராமன் வெற்றி பெற்றது கலிஃபோர்னியாவின் அரசியல் பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

நித்யா ராமன், நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானியுடன் அடிக்கடி ஒப்பிடப்பட்டு வருகிறார். இருவரும் ஜனநாயக சோசலிசவாதிகளாக இருப்பதுடன், முற்போக்குக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தனர்.

அவரது வெற்றி, அமெரிக்காவின் மிகப் பெரிய இரண்டு நகரங்களும் இனி ஜனநாயக சோசலிசவாதிகளால் வழிநடத்தப்பட உள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறது. அந்த அணியில், மம்தானி, அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் போன்ற அமெரிக்காவின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகளும் அடங்குகின்றனர்.

லாஸ் ஏஞ்சலிஸில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவது பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால் அமெரிக்காவின் மக்கள்தொகை அதிகமான நகரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள அந்த நகரில், வாக்காளர்கள் எவ்வளவு இடதுசாரி நோக்கில் செல்லத் தயாராக உள்ளனர் என்பதே முக்கியக் கேள்வியாக இருந்தது.



By admin