ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் திருமாறன் தயாரித்து நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் படம் கிட்டி.
தமிழ் சினிமாவில் பரபரப்பான திரைக்கதை உள்ள திரைப்படங்கள் வருவது கடினம் ஆகிவிட்டது. ஒரு சில கமர்ஷியல் படங்களை பார்த்த ரசிகர்களுக்கும் ஒரு விறுவிறு திரைக்கதை அம்சம் உள்ள படங்களை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் நிச்சயமாக மனதிற்குள் தோன்றும்.
கதாபாத்திரங்கள்:
அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விறுவிறு திரைக்கதையுடன் பரபர கதைகளைத்துடன் வரப்போகும் படம் கிட்டி. நாட்டில் நம்மை சுற்றி எவ்வளவு குற்றங்கள் நடந்தாலும் யார் செய்தார்கள் என்ற விசாரணை செய்வதுதான் ரெகுலர் ஃபார்முலா திரைக்கதையாக தமிழ் சினிமாவில் உள்ளது.
அதை மாற்றி கதை நாயகனை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இந்த திரைக்கதையால் நிச்சயம் படம் வெளியான பிறகு இயக்குநர் நெடுமாறன் மோகன்தாஸ் அனைவரையும் திரும்பி பார்க்க செய்வார் என தெரிகிறது.
படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் இயக்குநர் சிரமம் எடுத்து ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி இந்த கதாபாத்திரங்களில் இவர்கள் தான் நடிக்க வேண்டும் என்று நடிகர் தேர்வில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டிருப்பது குறிப்பிட்டதக்கது.
மூன்று நாயகிகள்:
மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் ‘முருகா’ அசோக்கிற்கு இப்படம் நிச்சயமாக திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவராக நிச்சயம் வலம் வருவார்.
நிஷா,சங்கவி மற்றும் சிமு அத்வானி ஆகிய மூன்று நாயகிகள் உடன், ‘ஊமை விழிகள்’ பட இயக்குநர் ஆர். அரவிந்த்ராஜ் படத்தின் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் பிரபல நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் சிறப்பு தோற்றத்திலும், தயாரிப்பாளர் திருமாறன் விசாரணை அதிகாரியாக வரும் போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், கடலூர், தரங்கம்பாடி, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது. இந்தப் படம் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.