• Sat. Nov 21st, 2026

24×7 Live News

Apdin News

430 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவக் கூடிய புதன் கிரகத்தில் பனிக்கட்டியா? விடை தேடும் புதிய விண்கலம்

Byadmin

Nov 21, 2026


430 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவக் கூடிய புதன் கிரகத்தில் பனிக்கட்டியா? விடை தேடும் புதிய விண்கலம்

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

சூரிய குடும்பத்தின் உள் பகுதியில் எட்டு ஆண்டுகள் பயணம் செய்த பிறகு, பெபிகொலம்போ என்ற விண்கலம் புதன் கோளை (மெர்க்குரி) நெருங்கி வருகிறது. இதுவரை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளாத கோள்களில் ஒன்றான புதனை பற்றி ஆய்வு செய்வதே இந்த விண்கலத்தின் நோக்கம்.

சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோளான புதன் குறித்து நன்கு புரிந்துகொள்வதற்காக இதற்கு முன்பும் விஞ்ஞானிகள் அதை நெருங்கிச் செல்ல முயன்றுள்ளனர். நிலவைவிடச் சற்றே பெரியதாக இருக்கும் இந்தக் கோளை அடைவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை.

எனவே, நவம்பர் மாத இறுதியில் பெபிகொலம்போ புதனை அடையவிருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதனின் மேற்பரப்பில் பகல் நேரத்தில் பல நூறு டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் நிலையில், அதன் சில பள்ளங்களில் நீர் பனிக்கட்டியாக இருப்பதாகக் கூறப்படுவது உள்ளிட்ட பல மர்மங்களுக்கு இந்த ஆய்வு விடையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.

By admin