• Thu. Aug 20th, 2026

24×7 Live News

Apdin News

IND Vs SL: இலங்கைக்கு எதிராக அபார வெற்றி பெற்றும் இந்தியாவுக்கு கவலை அளிக்கும் 2 விஷயங்கள் என்ன?

Byadmin

Aug 20, 2026


இலங்கைக்கு எதிராக அபார வெற்றி பெற்ற இந்தியா இன்னும் சரி செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

காலேவில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 462 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களும் எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 206 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியின் வெற்றியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார் முக்கியப் பங்கு வகித்தார்.

போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இலங்கை ஆடுகளத்தின் சூழலுக்கு ஏற்ப சிறப்பாகத் தன்னை மாற்றிக்கொண்டு பந்துவீசியுள்ளார்.

இந்திய அணியின் பேட்டிங் எவ்வாறு இருந்தது, அணியில் ஏதேனும் குறைபாடுகள் தென்பட்டனவா என்பது குறித்தும், இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ள தேவ்தத் படிக்கலின் செயல்பாடு குறித்தும், இந்திய அணியின் அடுத்தகட்ட நகர்வுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்தும், பேட்டிங்கில் எந்தெந்த பகுதிகளில் முன்னேற்றம் தேவைப்படுகிறது என்பது குறித்தும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.

By admin