கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தங்களுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியைத் தம்பதியினர் சுருக்கமாகப் பகிர்ந்து இருந்தனர். இந்நிலையில், குழந்தைக்குப் பெயரிட்டுள்ளதை வெளிப்படுத்தும் விதமாக முதல்முறையாக ஒரு குடும்பப் புகைப்படத்தை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்தப் படத்தில் தீபிகா மற்றும் ரன்வீர் இருவரும் பாரம்பரிய உடைகளில் குழந்தையைக் கையில் ஏந்தியிருக்க, அவர்களின் மூத்த மகளான துவா தனது குட்டித் தங்கை தேவிக்கு அன்போடு முத்தமிடும் அழகான தருணம் இடம்பெற்றுள்ளது. “Of Love & Abundance… Devi Padukone Singh” என்ற அழகான வாசகத்துடன் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர்.