சில நாட்களுக்கு முன்பு கூட்டு தாக்குதல்கள் தொடங்கிய நிலையில், மே 19-ஆம் தேதி நிலவரப்படி, 175 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் போர்க்களத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டு தாக்குதல்களின் விளைவாக, ஐசிஸ் அமைப்பின் சோதனை சாவடிகள், ஆயுத கிடங்குகள், தளவாட மையங்கள், இராணுவ உபகரணங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தக்கவைக்க பயன்படுத்தப்படும் நிதி வலையமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன,” என்று நைஜீரிய ராணும் கூறியது.
நைஜீரிய ராணுவம் மற்றும் அமெரிக்க ஆப்பிரிக்கா கட்டளைப் பிரிவு (AFRICOM) ஆகியவற்றின்படி, ஐ.எஸ் அமைப்பின் உலகளாவிய செயல்பாடுகளின் இயக்குநராக, கொல்லப்பட்ட அல்-மினூகி ஊடக மற்றும் நிதி செயல்பாடுகள் குறித்தும், ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் டிரோன்களின் உருவாக்கம் மற்றும் உற்பத்தி குறித்தும் மூலோபாய வழிகாட்டுதலை வழங்கினார்.