• Wed. Oct 7th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா: முன்னாள் ராணுவ மேஜருக்கு துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற ஆணை – எதற்காக?

Byadmin

Oct 7, 2026


நிதால் மாலிக் ஹசன்

    • எழுதியவர், சரீன் ஹபேஷியன்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் மேஜர் ஒருவருக்குத் துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று பென்டகன் அறிவித்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவத்தில் இந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல்முறையாகும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஃபோர்ட் ஹூட் தளத்தில் ஆயுதமின்றி இருந்த 13 அமெரிக்க வீரர்களை நிதால் மாலிக் ஹசன் சுட்டுக் கொன்றதுடன், மேலும் 32 பேரை காயப்படுத்தினார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளதாகவும், அதற்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் திங்கள்கிழமை சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு, துப்பாக்கிச் சூடு மூலம் நடத்தப்படும் முதல் ராணுவ மரண தண்டனை இதுவாகும்.

மரண தண்டனை நிறைவேற்றப்படும் தேதியையும் இடத்தையும் ராணுவச் செயலாளர் நிர்ணயிப்பார் என்று பார்னெல் கூறினார்.

By admin