• Sun. Aug 23rd, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் இருந்து புறப்பட்ட பிரமாண்ட சரக்கு கப்பல் மூழ்கியது – என்ன நடந்தது?

Byadmin

Aug 23, 2026


கடலோரக் காவல்படை இதுவரை உயிர் காக்கும் படகுகளில் (life rafts) இருந்த இருவரை மீட்டுள்ளது (குறியீட்டுப் படம்).

பட மூலாதாரம், Costfoto/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, கடலோரக் காவல்படை இதுவரை உயிர் காக்கும் படகுகளில் (life rafts) இருந்த இருவரை மீட்டுள்ளது (குறியீட்டுப் படம்). (கோப்புப் படம்).

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்தியாவில் இருந்து புறப்பட்ட பனாமா கொடி ஏந்திய ‘ஓஷன் வின்னர்’ என்கிற கப்பல் சனிக்கிழமை வங்காள விரிகுடாவில் மூழ்கியது.

ஒடிஷாவின் பாராதீப் துறைமுகத்தில் இருந்து 240 கடல்மைல் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

அந்தக் கப்பலில் 24 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் சீனாவைச் சேர்ந்த 20 பேர், மியான்மரைச் சேர்ந்த 3 பேர் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர்.

இரு பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களைக் காணவில்லை என அதிகாரிகளை மேற்கோள்காட்டி ராய்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.

அந்தக் கப்பல் ஒடிசாவிலிருந்து சிங்கப்பூருக்கு இரும்புத் தாதுவை ஏற்றிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

By admin