• Thu. May 28th, 2026

24×7 Live News

Apdin News

இரானிய ராணுவத் தளம் மீது புதிய தாக்குதல்களை நடத்திய அமெரிக்கா

Byadmin

May 28, 2026


இரான், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அமெரிக்க ராணுவம் இரான் மீது மற்றொரு கட்ட வான்வழித் தாக்குதல்களைத் நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் “அளவானவை, முற்றிலும் தற்காப்பு சார்ந்தவை மற்றும் போர் நிறுத்தத்தைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டவை” என்று அது குறிப்பிடுகிறது.

“ஹோர்மூஸ் நீரிணையில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய” நான்கு இரானிய ஒருவழித் தாக்குதல் ட்ரோன்களை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியதாகவும்; மேலும், ஐந்தாவது ட்ரோன் ஒன்றை ஏவத் தயாராக இருந்த, துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் அமைந்துள்ள ஒரு இரானிய தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (Centcom) உறுதிப்படுத்தியுள்ளது.

பந்தர் அப்பாஸின் கிழக்கே வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக இரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதனிடையே தெற்கு இரான் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஒரு அமெரிக்க விமானப்படைத் தளத்தைத் குறி வைத்ததாக இரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

அந்தத் தளம் எங்குள்ளது என்பதை IRGC குறிப்பிடவில்லை. ஆனால், ஓர் அமெரிக்கத் தளத்தைக் கொண்டுள்ள குவைத், “எதிரிகளின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான அச்சுறுத்தல்களை” இடைமறித்ததாகக் கூறியுள்ளது; இருப்பினும், அவை எங்கிருந்து வந்தன என்பதை அது குறிப்பிடவில்லை.

By admin