• Fri. May 1st, 2026

24×7 Live News

Apdin News

இரானில் முடிவுகளை எடுப்பது யார்? அதிபர், கலிபாஃப் அல்லது புரட்சிகர காவல் படையா?

Byadmin

May 1, 2026


இரான்

பட மூலாதாரம், EPA

    • எழுதியவர், அமிர் அஸிமி
    • பதவி, பிபிசி பாரசீக மொழி சேவை ஆசிரியர்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடுத்துள்ள போரின் முதல் தாக்குதல் நடந்ததிலிருந்து இரானின் முன்னுள்ள மிகப்பெரிய கேள்வி, யார் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதுதான்.

அதிகாரபூர்வமாக பார்க்கையில் பதில் தெளிவாக இருக்கிறது.

மொஜ்தபா காமனெயி போர் தொடங்கிய முதல் நாளான பிப்ரவரி 28-ஆம் தேதி அன்று அவரின் தந்தை அலி காமனெயி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதி உயர் தலைவர் பொறுப்பை ஏற்றார். இஸ்லாமிய குடியரசு அமைப்பில் இந்தப் பதவி இறுதியானது. போர், அமைதி மற்றும் நாடு பயணிக்க வேண்டிய உத்தி சார் திசை என முக்கியமான அனைத்து விஷயங்களிலும் அவரின் சொல்லே இறுதியானது.

ஆனால் நடைமுறையில் அனைத்தும் வேறாக உள்ளது. இரானிய தலைமை முறிந்த நிலையில் உள்ளது என கூறும் டிரம்ப், அந்நாடு “ஒன்றுபட்ட முன்மொழிவை” வழங்க அமெரிக்கா காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

சமீபத்தில் இரானியர்களுக்கு அவர்களின் கைப்பேசியில் இரான் தலைவர்கள் செய்தி அனுப்பியபோது ஒற்றுமை என்பது அவர்களின் எண்ணங்களில் நிச்சயமாக இருந்தது.

By admin