கடந்த ஆண்டு அவர்கள் தங்களின் நிச்சயதார்த்தத்தை அறிவித்திருந்தனர். அந்தப் பதிவில் மிகப்பெரிய வைர மோதிரத்தை அணிந்திருந்த ஜார்ஜினா அவரின் தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியில், “ஆம். இந்தப் பிறவியிலும், எனது அனைத்து பிறவிகளிலும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மற்ற மூன்று குழந்தைகளையும் வளர்க்க ஜார்ஜினா உதவி வரும் நிலையில், ரொனால்டோ குடும்பம் தற்போது சௌதி அரேபியா தலைநகர் ரியாத்தில் வசித்து வருகிறது.
இந்தத் தம்பதியினரின் முதல் மகளான அலானா மார்டினா 2017-ஆம் ஆண்டு பிறந்தார். அவர்களின் இளைய மகளான பெல்லா 2022 ஏப்ரலில் பிறந்தார். அவர் உடன் பிறந்த இரட்டைச் சகோதரர் உயிரிழந்தார்.
ரொனால்டோ தனது விளையாட்டு பயணத்தில் சுமார் 1,000 கோல்களை அடித்துள்ளார். அவர் லிஸ்பனைச் சேர்ந்த ஸ்போர்டிங், மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மேட்ரிட், ஜுவன்டெஸ், சௌதி அரேபியாவில் உள்ள அல் நசர் மற்றும் போச்சுகல் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார்.
தற்போது போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனான ரொனால்டோ சமீபத்தில் தனது ஆறாவது மற்றும் இறுதி உலக கோப்பையில் விளையாடினார். இந்தச் சாதனையை அவர் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி உடன் பகிர்ந்து கொள்கிறார்.
41 வயதான ரொனால்டோ ஐந்து முறை பாலன் டி ஓர் விருதை வென்றுள்ளார். இதே விருதை அதிக முறை பெற்றவர்கள் பட்டியலில் எட்டு முறை வென்ற மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
2022-இல் அவர் இணைந்த தற்போதைய கிளப்பான அல்-நஸ்ர், அவர் இரண்டு ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கடந்த ஆண்டு உறுதிப்படுத்தியது. இதன் மூலம், ரியாத்தைச் சேர்ந்த அந்த கிளப்புடன் அவர் 2027 வரை நீடிப்பார்.
கடந்த ஆண்டு, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி ரொனால்டோவின் நிகர சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டது. இதன் மூலம் அவர் முதல் பில்லியனர் கால்பந்து வீரர் ஆனார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு