• Thu. Jun 4th, 2026

24×7 Live News

Apdin News

சென்னையில் தவெக எம்எல்ஏ பல்லவி – மேயர் பிரியா மோதலுக்கு காரணமான 3 விஷயங்கள்

Byadmin

Jun 4, 2026


சென்னை மாநகராட்சி, பள்ளி நிகழ்ச்சி, தவெக எம்எல்ஏ பல்லவி, திமுக மேயர் பிரியா

பட மூலாதாரம், GCC

படக்குறிப்பு, சென்னையில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சை உருவானது.

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சென்னையில் இன்று நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சியில் மேயர் பிரியாவால் தான் அவமதிக்கப்பட்டதாக திரு விக நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் மேயர் பிரியா நடைமுறை விதிகள்படி (ப்ரோட்டோகால்) தான் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

திமுக மேயர் மற்றும் தவெக எம்.எல்.ஏ இடையே ஏற்பட்டுள்ள இந்தச் சர்ச்சை விவாதப் பொருளாகியுள்ளது.

சென்னை மாநகராட்சி, பள்ளி நிகழ்ச்சி, தவெக எம்எல்ஏ பல்லவி, திமுக மேயர் பிரியா

என்ன நடந்தது?

சென்னை மாநகராட்சி தற்போது திமுக கட்டுப்பாட்டில் உள்ளது. திமுகவைச் சேர்ந்த ஆர்.பிரியா சென்னை மேயராக உள்ளார்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் திரு விக நகர் மண்டலத்தில் அமைந்துள்ள சென்னை உருது நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மேயர் பிரியா, திரு விக நகர் எம்.எல்.ஏ பல்லவி, மாநகராட்சி கல்வி இணை ஆணையாளர் கற்பகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

புதிய கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைக்கும் நிகழ்வின்போது சிறு பரபரப்பு ஏற்பட்டது. பின்னே இருந்த பல்லவி, பிரியாவுக்கு முன்பாக ரிப்பன் வெட்டினார்.

By admin