• Mon. Nov 9th, 2026

24×7 Live News

Apdin News

தூத்துக்குடி கரைவலை மீனவர்கள் ‘கடல்நீரைக் குடிநீராக்கும்’ திட்டத்தை எதிர்ப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

Byadmin

Nov 9, 2026


கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், தூத்துக்குடி, மீனவர்கள், வ.உ.சி துறைமுகம்
படக்குறிப்பு, சோலையம்மாள்

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“கரைவலை மீன்பிடிப்பில் இருக்கும் முக்கிய அம்சமே, இதில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் பங்கெடுக்கலாம். இந்தத் தொழிலில் பெரும் உடல் உழைப்பு தேவை என்றாலும், இதை நம்பித்தான் நாங்கள் பல தலைமுறைகளாக வாழ்கிறோம். இப்போது திடீரென்று இனி இங்கு மீன்பிடிக்க முடியாது எனச் சொல்கிறார்கள்,” என்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவரான சோலையம்மாள், இவருக்கு 53 வயது.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் உள்ள ‘சுனாமி காலனி’ பகுதியில் 200க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. ‘கரைவலை மீன்பிடித்தல்’ தான் இவர்களது பிரதான வாழ்வாதாரமாக உள்ளது.

தூத்துக்குடி புதிய துறைமுகப் பகுதியில், வ.உ.சி துறைமுகம் சார்பாக செயல்படுத்தப்படும் ‘கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தால்’ கரைவலை மீன்பிடித்தல் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த மீனவக் குடும்பங்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு இத்திட்டப்பணிகளுக்கு எதிராக கடலில் முற்றுகைப் போராட்டம் நடத்திய மீனவர்கள், இதை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும் அல்லது கைவிட வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

இருப்பினும், ‘இந்தத் திட்டத்தால் கரைவலை மீன்பிடி தொழில் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது’ என வ.உ.சி துறைமுக நிர்வாகம் தெரிவிக்கிறது.



By admin