திருமணம் குறித்து கேட்ட உத்தவ் தாக்கரே
பின்னர் உத்தவ் தாக்கரே அபிஜீத் தீப்கே தாயாரிடம் பேசியுள்ளார். அப்போது, அபிஜீத் தீப்கேயின் திருமணம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அபிஜீத் தீப்கே தாயார் “எல்லா பெற்றோர்களும் அவர்களுடைய குழந்தைகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். முன்னதாகவே, அவனிடம் திருமணம் குறித்து கேட்டேன். ஆனால், இது முற்றிலும் அவனுடைய முடிவு” எனக் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேலையில்லா இளைஞர்களை கரப்பான்பூச்சி என விமர்சனம் செய்திருந்தார். இதனால் அபிஜீத் தீப்கே கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற கட்சியை தொடங்கினார். பின்னர், நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்தார். மத்திய கல்வி அமைச்சராக இருந்து தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினார்.