• Thu. Jul 2nd, 2026

24×7 Live News

Apdin News

நிலநடுக்க இடிபாடுகளுக்குள் 6 நாட்கள் சிக்கியிருந்த குழந்தை மீட்பு – வெனிசுவேலா மீட்புப்பணிகளின் நிலவரம்

Byadmin

Jul 1, 2026


செவ்வாய்க்கிழமை நடந்த மீட்புப் பணியின் காட்சிகளை ஜோர்டான் குழு வெளியிட்டது

பட மூலாதாரம், Jordan Public Security via Reuters

படக்குறிப்பு, செவ்வாய்க்கிழமை நடந்த மீட்புப் பணியின் காட்சிகளை ஜோர்டான் குழு வெளியிட்டது

    • எழுதியவர், கெய்ட்லின் டோஹெர்டி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

வெனிசுவேலாவில் பேரழிவு ஏற்படுத்திய நிலநடுக்கங்களுக்கு, ஆறு நாட்களுக்குப் பின் இடிபாடுகளிலிருந்து மூன்று வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஜோர்டான் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

கிளீபர் மோரான் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தை, லா குவைரா மாநிலத்தில் உள்ள இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டதாக இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்தார். ரோட்ரிக்ஸ் அந்த குழந்தையின் மீட்பை “நமது மக்களுக்கு நம்பிக்கையின் ஆதாரம்” என்று விவரித்தார்.

பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அவசரமாக உணவும் தங்குமிடமும் தேவைப்படுவதாக ஐநா எச்சரித்துள்ள நிலையில் இது நடந்துள்ளது.

கடந்த வாரம் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 அளவிலான நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,943 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 10,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

நாசாவின் செயற்கைக்கோள் தரவுகளின் ஆரம்ப மதிப்பீட்டின்படி, இந்த அதிர்வுகள் அநேகமாக 58,870 கட்டடங்களை சேதப்படுத்தியிருக்கலாம் அல்லது அழித்திருக்கலாம்.

By admin