• Mon. Aug 24th, 2026

24×7 Live News

Apdin News

பண விவகாரங்களில் மனிதர்கள் எடுக்கும் முடிவுகளுக்குப் பின்னால் உள்ள உளவியல் என்ன?

Byadmin

Aug 24, 2026


'இழப்பு பற்றிய பயம்' பண விவகாரங்களில் மனிதர்களின் முடிவுகளை எப்படி தீர்மானிக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கினால் உறுதியான தொகையை தேர்வு செய்வீர்களா? அல்லது அதைவிடவும் 20 மடங்கு கூடுதலை தொகைக்காக சவாலான முடிவை எடுப்பீர்களா?

    • எழுதியவர், லிஸி மெக்நீல் மற்றும் டாம் கோல்ஸ்
    • பதவி, மோர் ஆர் லெஸ், பிபிசி பாட்காஸ்ட் மற்றும் தொடர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

உங்களுக்கு உடனடியாக 50,000 டாலர் பெறுவது அல்லது 1 மில்லியன் டாலர் வெல்வதற்கான 50% வாய்ப்பு ஆகிய இரண்டு வாய்ப்புகளை வழங்கினால், நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

சமீபத்தில் யூகவ் (YouGov) என்ற சர்வதேச ஆராய்ச்சி மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் பிரிட்டனைச் சேர்ந்த 4,600 பேரிடம் இதுபோன்ற ஒரு கேள்வியை முன்வைத்தது.

முடிவு என்ன தெரியுமா?

கிட்டத்தட்ட நான்கில் மூன்று பேர் (73%) இப்போது 50,000 பவுண்டை எடுத்துக்கொள்வதாகக் கூறினர்.

சுமார் ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே (21%) 1 மில்லியன் பவுண்டைப் பெறுவதற்கான வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தனர். மேலும் இதில் கலந்து கொண்டவர்களில் 6% பேரால் என்ன செய்வது என்று தீர்மானிக்கவே முடியவில்லை.

By admin