• Tue. Nov 17th, 2026

24×7 Live News

Apdin News

பற்கள் கறைபடாமல் இருக்க பல் மருத்துவர் சொல்லும் 7 எளிய வழிகள்

Byadmin

Nov 17, 2026


காபி, டீ, பிரியாணியால் பற்களில் கறையா? தடுக்க பல் மருத்துவர் சொல்லும் 7 எளிய வழிகள்

    • எழுதியவர், லாரன் பாட்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பல்பொருள் அங்காடியில் பற்பசைகள் வைக்கப்பட்டிருக்கும் வரிசையில் நின்று பாருங்கள். அவற்றின் பாக்கெட்டுகளிலும் பெட்டிகளிலும் பற்களை வெண்மையாக்கும் என்று பல்வேறு விளம்பரக் கூற்றுகள் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

முன்பை விட இப்போது நமது பற்களின் வெண்மை குறித்து அதிக அக்கறை காட்டுகிறோம் என்று தெரிகிறது.

வாய்வழி சுகாதார அறக்கட்டளை நடத்திய ஆய்வில், புன்னகையைப் பொறுத்தவரை 42 சதவீதம் பேர் வேறு எதையும் விடத் தங்கள் பற்களின் வெண்மையைத்தான் மாற்ற விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பற்களை வெண்மையாக்கும் பொருள்கள்தான் ஒரே வழியா? அல்லது நாம் உண்ணும் உணவுகளும் பற்களின் இயற்கையான வெண்மையைப் பாதுகாக்க உதவுமா?

பற்களில் கறை ஏற்படக் காரணம் என்ன?

பற்களில் கறை ஏற்படுவதில் இரண்டு வகைகள் உள்ளன. அவை உட்புறக் கறைகள் மற்றும் வெளிப்புறக் கறைகள் என்று தனியார் மற்றும் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் பணியாற்றும் பல் மருத்துவர் டோபி ஹான்காக் கூறுகிறார்.

By admin