• Sun. Nov 15th, 2026

24×7 Live News

Apdin News

Ind vs Pak: இந்தியாவிடம் தோற்றது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறியது என்ன?

Byadmin

Nov 15, 2026


19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்: இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறியது என்ன?

    • எழுதியவர், ரஷீத் ஷகூர்
    • பதவி, பிபிசி நியூஸ் ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சனிக்கிழமை மாலை ஓமனில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையின் பரபரப்பான இறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை கடைசிப் பந்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

பாகிஸ்தானின் இந்தத் தோல்வி குறித்து சமூக ஊடகங்கள் முதல் கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நன்றாக விளையாடிய போதிலும் தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணியினரின் முகங்களில் ஏமாற்றம் தெரிந்தது.

படக்குறிப்பு, நன்றாக விளையாடிய போதிலும் தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணியினரின் முகங்களில் ஏமாற்றம் தெரிந்தது.

பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்டோர் அணியின் தோல்வி குறித்து அந்நாட்டின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களும் பகுப்பாய்வாளர்களும் இரு அணிகளையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளனர்.

இறுதிப் போட்டி குறித்துப் பல கருத்துகள் சமூக ஊடகங்களிலும் வெளியாகி வருகின்றன.

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுவது என்ன?

பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து மிகப் பெரிய ஸ்கோரை எடுத்தது.

படக்குறிப்பு, பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து மிகப் பெரிய ஸ்கோரை எடுத்தது.

பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ராஷித் லத்தீப் பிபிசி ஹிந்தியிடம், “இந்தப் போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன; இறுதிப் போட்டியும் மிகச் சிறப்பாக இருந்தது. அதன் முடிவு கடைசிப் பந்தில்தான் தீர்மானிக்கப்பட்டது” என்று கூறினார்.

By admin