ரஷ்யா முதன்முதலில் 2024-ஆம் ஆண்டிலும், மிக அண்மையில் கடந்த மாதமும் உக்ரைன் மீது ஏவிய ஒரெஷ்னிக் ஏவுகணையானது, 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பாயும் திறன் கொண்டது. அதனை இடைமறிப்பது சாத்தியமற்றது என்று அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளபோதிலும், மேற்கத்திய வல்லுநர்கள் அந்தக் கூற்றைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
உக்ரைனுக்கு எதிராக ஒரெஷ்னிக் ஏவுகணையை ரஷ்யா இன்னும் உண்மையான போர்ச் சூழல்களில் பயன்படுத்தவில்லை என்றும், அதன் விளைவுகளை கவனிப்பதற்காக மட்டுமே சோதித்து பார்த்துள்ளது என்றும் புதின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது, எதிர்காலத்தில் நகர்ப்புற இலக்குகள் உட்பட, இந்த ஆயுதத்தை முழு அளவில் பயன்படுத்துவது குறித்த மாஸ்கோவின் முடிவுகளுக்கு வழிகாட்டும் என்றும் அவர் கூறினார்.